அன்பிற்குரிய ஆசிரியர்களுக்கு

தலைப்பு :அன்பிற்குரிய ஆசிரியர்களே

பெயர் : சங்கவி சகி


மாதா பிதாவிற்கு அடுத்து குருவாக இருந்து அறிவையும் திறனையும் எங்களுக்குள்ளே தேடி தோண்டி எடுத்து இவ்வுலகில் விதையாய் விதைத்து அனைவருக்கும் பயன் தரும் விருச்சமாய் கல்வி நீரை தாகம் குறையாமல் ஊட்டி வளர்த்தீர்...

வாழ்க்கை முழுக்க பயிற்றுவித்த பாடங்களின் மொழி மூளையின் செல்கள் எங்கும் நாக்கின் ஈரம் போல பட்டு பரவிக்கிடக்கிறது...

தான் உயராவிட்டாலும் தன்னுடைய பிள்ளைகள் 
முன் வரவே தாய், தகப்பனையும் தாண்டிய அக்கறையுடன் நான்கு சுவற்றுக்குள் குரல் மங்கி கால்கள் மரத்து போயினும் கல்வியை கற்றுத்தந்தீர்...

உம் வாய் உதிர்த்த மொழியால் 
நீங்கள் இசைத்த கற்பித்தல் இசைக் கருவிகளில் பிறந்த ஓசையும் பொருளுமாய் இணைந்து
உலகை சிறந்து ஆளுமை செய்பவர்களாக 
பள்ளி/கல்லூரியில் இருந்து வெளிவந்தோம்...

கல்வி கருவில் பத்திரமாய் பேணி பாதுகாத்து வளர்த்துவிட்ட உமது கற்பிக்கும் பணி 
அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரமாய் சிறக்க  வேண்டுகி்றேன் அன்புள்ள ஆசிரியர்களே!! 

@⁨Sapna Sis⁩ @⁨sow karthi⁩

0 Comments