பெண்ணியம்

பெயர் :- கவியாரணி 
சா. கிருஷாந்தி 

தலைப்பு :- பெண்ணியம் 

முதலிடம்

பெண்ணியம் பேசு பெண்மையே 
நீ பேசாத பேச்சு பெறாத உரிமையாகி போகும் 
ஆண்மையின் அதிகார படுத்தல்களில் 

பெண் குழந்தை பிறக்க கள்ளிப்பால் கொடுத்த பாலை மனங்கள் இவர்கள் 
நீ கன்னிவெடியாய் வெடிக்க ஆச்சர்யத்தில் சிதற இன்று பேதைகளாக அதே நம்மவர்கள் 

பிரான்ஷிய புரட்சியில் பிரகடனப்படுத்தபட்ட 
பெண்ணியம் இன்றும் தொடர்கிறதே தவிர 
காக்கபடுகிறதா..? 

பெண்ணியல் வாதிகள் பேசிய தத்துவங்கள் தலை மறைவாகி போயினவோ..? 

பெண்ணடிமைத்தனம் இன்றும் அரக்க உள்ளங்களில் ஊறுகின்றனவே..!

பெண்கள் வாக்குரிமை பெற அவள் வார்த்தைகள் கேட்க காதுகள் கிடைக்கவில்லையோ, 
வேட்பாளராக போட்டியிட..!

போராடிகொண்டேதான் இருக்கிறாள் இன்றும் 
பெண்ணியம் காக்கும் போராளியாக...

பெண் விடுதலை தாராதோ இந்த உலகம்!!
பெண்களை சமுதாயம் ஒதுக்கி பார்ப்பதுதான் ஏனோ..? 

உரிமைகள் மறுக்கபடுகின்றது உணர்வுகள் அழிக்கபடுகின்றது சிக்கல்களுக்குள் சிறை பிடிக்கபடுகிறது பெண்ணியம்... 

அனைத்திலும் உதாஷீனம் ஆக்கபட்டவள் பெண் 
அவள் உடல் சுகம் உரிமை கொண்டாடபடுகிறது கய நெஞ்சங்களால்... 

ஆனால் விழ செய்தால் வீழ்ந்து போவது பெண்ணியம் அல்ல 
தாய்மையை அடைவதிலே அசாராதவர்கள் 
அதிகார போர்வையில் முடக்கப்பட்ட பெண்ணியம் எழ செய்வோம்... 

பெண்ணியம் பேசு பெண்மையே... 



Insta id :- krish_ashiq

@⁨Sowbarnika Pratibha⁩ 
@⁨Kamu pillai Sis⁩

0 Comments