இதுதான் என் கவி
இருப்பினும்
மூன்றாம் பாலினம் பற்றிய என் கவி உங்கள் பார்வைக்கு. ஒரு சிறிய முயற்சி.
*திருத்தங்கையரே*
திசை எங்கும் உங்கள் குரல் ஒலிக்கிறது
தீர்க்கமாய் உள்ளத்தில்
வளம் தருகிறது
என் சிந்தையிலே எழுந்த
உங்கள் ஆதி சங்கரர் அம்சம்
என் அச்சத்தை உடைத்தது
எனக்கு அவமானம் வருகையிலே
உங்களை எண்ணவே
அஃது தூசியாய் மறைகிறது
உங்கள் தைரியம் என்னை ஊக்கம் செய்கிறது
மூன்றாம் இனமல்ல நீங்கள்
எங்களில் ஒருவரே ஆண் பெண் இருவர் மட்டும் அல்ல
மூவராய் வலம் வாருங்கள்
முகங்களை பார்ப்பதில்லை
இறைவன் மனம்
முயற்சியை காண்பதே
கடவுள் வண்ணம்
எழுந்து வாருங்கள் ஒன்றாக இணைந்தே உலகை இரசிப்போம்
திருநங்கை
திருத்தங்கை என்றே மாற்றம் பெற்றதிங்கே
திரு (ஆண் )
தங்கை (பெண்)
தெய்வத்திருமகனும் நீவீரே
தெய்வத்திருமகளும் நீவீரே
நன்றி
இது போட்டியின் பார்வைக்கு அல்ல
0 Comments