இயற்கையின் காரிகை
இரண்டாம் இடம்
கருவறையில் இன்னல்கள் பல கொண்டு...
தாய்ப்பால் தவிர கள்ளிப்பாலின் சுவையையும் ருசித்தவள்...
வயது எட்டியதோ
இல்லையோ...
மணமுடித்து
வேறு வீட்டிற்கு செல்பவள்...
வம்சத்தை விருத்தி அடைய செய்பவள்...
தன் பிறப்பிற்க்கே பெருமை சேர்ப்பவள்...
மறு ஜென்மம் என அறிந்தும்
பிரசவத்தை முழு மனதோடு ஏற்று
மரணத்தோடு வென்று
உயிர்களை உலகிற்கு
பரிசாக கொடுப்பவள்...
தன் ரத்தத்தை பாலாக
பிள்ளைக்கு ஊட்டுபவள்...
அப்பிள்ளைக்கு இடையூறு என்று அறிந்தால்
துடிப்பவளும்
அதிலிருந்து
காப்பவளும் அவளே...
பெண்
குளிருக்கு அணைக்கும் இதமானவள்...
கோபத்தில் சுட்டெரிக்கும்
சூரியன்...
தன்னம்பிக்கையும்...
தளராத மனமும்...
எதையும் எதிர்கொள்ளும்
திறனும் வாய்ந்தவள்....
பெண்
எந்த இன்னல்கள் வந்தாலும் தன்னை தானே செதுக்கி கொள்பவள்...
கண்ணாடி போல முன் உள்ளவர்களின் பிம்பத்தை அவர்களுக்கே பறை சாட்டுபவள்...
பெண்ணை ஏளனமாய்
பார்ப்பவர்களுக்கு புரிவதில்லை...
தன்னை பெற்றவளும்
பெண் தான் என்பது...
பூமி மட்டும் சுழன்றுகொன்டே இருப்பதில்லை..
சில வீட்டு பெண்களும்
அப்படித்தான்....
0 Comments