பெயர் :-
கவியாரணி சா. கிருஷாந்தி
தலைப்பு :- தெய்வதிருமகள்
கண்கள் காணும் காட்சிகள் தவறு
வாய்கள் பேசும் வார்த்தைகள் தவறு
பிரம்மன் செய்த பிழையில் பிறந்த பிறப்பு இது
அரை அரை பகுதிகளாய் இரட்டை வேடம்
வாழ்க்கை எனும் ஒற்றை நாடகத்தில்
இழிவான நடத்தைகளுக்கு எம்மை இரையிட்டனர்
வாழும் ஒவ்வொரு நாளும் இறக்க செய்கிறதே
பிறப்பின் இலக்கண பிழை
எம்மில் உடல் சுகம் நாடுபவர்கள்
எம் உணர்வுகளை அறிய தவறுவதுதான் ஏனோ.?
எத்தனை தடைகள்
எத்தனை ஒதுக்கீடுகள்
நெரிசலில் இடிபடுபவர்கள் எங்கள் பக்கம் இருக்கும் இருக்கையை கவனித்து தவிர்க்கிறார்கள் பேருந்தில்
மங்கையர் நாங்கள் மகளிர் தின நிகழ்வில் முற்றத்திலேயே முற்றுகையிட்டு தடுக்க படுகிறோம்
இன்னும் எத்தனை எத்தனையோ வலிகள் வரிகளுக்குள் அடங்காமல் வார்த்தை தேடி அலைகின்றன
இருந்தும் எங்களுக்குள் சில திருத்தங்கள் கொண்டு பெண்மையை மென்மையாக தருகிறோம்
சிலரால் மதிக்கபடுகின்ற பலரால் அவமதிக்கபடுகின்ற அர்த்தமற்ற வாழ்க்கை வாழ்கிறோம்
பெண்மை ஏங்கும் தாய்மையும் கூட எங்களுக்கு கனவுதான்
பிரசவ வலியும் காணாது ஒரு குழந்தையின் தாயாகிறோம்
எங்களை போல ஒரு பிறப்பிற்கு
சற்று பெருமிதம் அடைகிறோம் அர்த்தநாதீஸ்வரர்க்கு அடுத்து
சிவன் பாதி சக்தி பாதியாக எங்கள் பிறப்பு அமைந்ததில்
ஆணின் வீரம் பெண்ணின் நாணம் சேர்ந்ததால் அரவாணி எனும் அர்த்தமுள்ள பெயர் பெறுகிறோம்
என்றுமே இந்த சமூகம் எங்களை ஏற்காது அதுதான் உலகம் நியதி என நிர்ணயித்து விட்டனர்
இன்று நாங்கள் பேசப்படுவதும் ஒரு பேசு பொருளாகத்தான்
திரைபடங்களின் தொனிப்பொருளாக கதை கவிதை கட்டுரைகளின் கருபொருளாக
இப்போதும் கூட இந்த தளத்திலும் அப்படித்தான் !!
அவரவர் பிரசித்திக்கு நாங்கள் ஒரு பேசுபொருள்
நான் உட்பட..
மனிதம் மறந்த மானிடர்களே
நாங்களும் உங்கள் இனத்தவர்கள் தான்
கொஞ்சம் மதித்து மரியாதை தர முயற்சி செய்யுங்கள்
மனித நேயம் மறக்காதீர்கள்
எங்களுக்கும் கனவு இலக்கு உணர்வு உயிர் எல்லாம் உண்டு
உங்கள் கண்களுக்கு தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை
அதற்கு சற்று வழிகொடுங்கள்
அது போதும்
மனிதனே மனிதம் கேட்டு கெஞ்சும் நரகம் போல் ஆனதே
மனித பூமி ...?
இதுவும் எங்கள் பிறப்பின் இலக்கண இடர் தானோ..??
Insta id :- krish_ashiq
@Kamu pillai Sis
@Sowbarnika Pratibha
0 Comments