இயற்கையின் காரிகை...
இரண்டாம் இடம்
அண்ணாவும் பெரியாரும்...
சொன்னது யாராயினும்
படித்தது எங்காயினும்
ஏன் மொழிந்தது நானே ஆயினும் .
புத்திக்கோ
பொது அறிவுக்கோ
பொருந்தாததை நம்பாதே
என்று தொடங்கி...
கடவுளுக்கு தரும் காணிக்கை
காட்டிலும்
கல்விக்கு தரும் உதவி
சிறந்தது என்று சொன்னது வரை பெரியாரின் ஒவ்வொரு வார்த்தையும்
வாழ்வின் பலம் நமக்கு...
தேவைப்படும் நேரம் நாம் நல்லவர்களாம்...
தேவை தீர்ந்ததும் நாம்
கெட்டவர்களாம்...
இரு மொழி கொள்கையாம்...
மூன்றாம் மொழி
நுழையுமாம்...
அந்நேரம்
அவர்களுக்குள்ளும்
தோன்றிடும் அச்சமாம்...
அதில் என்றும்
வாழ்வேன் நான்..
என்று சொன்ன
அண்ணாவின் சொற்களில்
மெருகேருதே நம் மொழியின்
பற்றும்...
விழுந்தது எங்கே என்று தேடாதே
வழுக்கி விட்ட இடத்தை தேடு
என்று சொல்லி
வாழ்வின் பல உண்மை
நெறிகளை கற்று கொடுத்து
வாழ்க்கையை புரிந்தும்
பிடித்தும் வாழ
வழிவகை செய்து கொடுத்து
உலகிற்கு பலவற்றை
உணர்த்தியவர்கள்..
அவ்வழியில் வாழ்ந்தும் காட்டிய
உத்தம மனிதர்கள் அல்லவோ.....
@Barathi Pratibha
@Kamu pillai Sis
0 Comments