இரண்டாம் இடம்
அறிவு செவ்வூரான்
ஒரு மொழி
ஒரு கலாச்சாரம்
ஒரு பண்டிகை கொண்டாடும்
பல நாடு
பலமொழி
பல கலாச்சாரம்
பல பண்டிகை கொண்டாடும்
எந்நாடு
என் நாட்டுக்கு என தனித்துவமுண்டு
அதற்கும்
ஒரு மகத்துவமுண்டு
வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு இது
வேற்றுமையே
வேதமாகிவிடுமோ ஒற்றுமை
ஓரம் போய்
விடுமோ
மனிதநேயம்
கொண்ட மக்கள் வாழும் நாடு இது
சில மத வெறியர்களால் மாற்று வழியில் செல்கிறதே...
மனம் பொறுக்க வில்லையே
இந்நிலை மாற வேண்டும்..
அரவயித்து
கஞ்சிக்கு அரசாங்கத்திடம் கையேந்தும் விவசாயின் நிலை மாற வேண்டும்
அடிமைப் பெண்ணின் நிலை உயர வேண்டும்
நவீன தீண்டாமை ஒழிய வேண்டும்
சாதி வேரறுக்க பட வேண்டும்
சாதி பிடியில் சிக்கியிருக்கும் இளைஞர்கள் காப்பாற்றப்பட வேண்டும்
சாதியை தூண்டுபவனை சாக்கடைக்குள் புதைக்க வேண்டும்
யாசகர்கள்
இல்லாத நாடாக
மாற வேண்டும்
மத வேசகர்கள் நாட்டை விட்டு ஓட வேண்டும்
முதியோர் இல்லம் இல்லா நிலை வேண்டும்
தெருவோரம் வாழும் நிலை ஒழிய வேண்டும்
இளைஞர்கள் கையில் இந்தியா வேண்டும்
நாடாளுமன்றத்தில் இளைஞர்கள் வேண்டும்
கொரோனா போன்ற கொடிய நோய்கள் இல்லாத நாடாக வேண்டும்
கோட்டையில் அரசன் ஞாயவானாக இருக்க வேண்டும்
அறிவியலில் இன்னும் ஆற்றல் வேண்டும்
அரசியல்வாதிகளிடம் நேர்மை வேண்டும்
கருப்பு பணம் வெளிவர வேண்டும்
இந்திய கடன்
ஒழிய வேண்டும்
வறுமை இல்லாத நாடாக வேண்டும்
வயிற்று பசிக்கு சோறு வேண்டும்
மொத்தத்தில் இந்தியா
வல்லரசாக வேண்டும்
இயற்கை பாதுகாக்கப்பட வேண்டும்
அறிவு செவ்வூரான்
@Sowbarnika Pratibha
@Kamu pillai Sis
0 Comments