பெயர் :தெ.கவிதாஞ்சலி
மூன்றாம் இடம்
தலைப்பு:என் பார்வையில் எதிர்கால இந்தியா
இளைய தலைமுறையிடம் நாட்டுபற்று அதிகபடுத்தி இந்தியா வல்லரசு நாடாக வலம் வர வேண்டும்!!!!
அனைத்து மக்களின் குறைகளை கேட்டு சரி பண்ணக்கூடிய முதல்வர் வர வேண்டும்.....!!!!
கொரானாவால் இந்தியாவில் சரிந்த பங்குசந்தை நிலவரத்தை அதிகபடுத்தவும் வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலை கொடுக்குமாறு கல்விதிட்டமும் அதிக அரசு வேலைவாய்ப்பும் தரும்படி அரசாட்சி அமைய வேண்டும்.....!!!!!!
விவசாயம் அழியாமல் இருக்க வருங்கால சந்ததிக்கு விவசாயத்தை கற்று கொடுக்க வேண்டும்...!!!!!
விவசாயிக்கு தகுந்த மரியாதையும் விவசாயத்தை வளர்க்கவும் கற்று கொள்ள வேண்டும்...!!!!!
சாதிகளால் ஏற்படும் மானுட பிரிவை அகற்றி ஆணுக்கு இணையாக சரித்திரம் படைக்கும் சாதனை பெண்மைகளை ஊக்குவிக்க வேண்டும்...!!!
இன்னமும் வீட்டிற்குள் இருக்கும் பெண்ணடிமைதனத்தை குறைக்க வேண்டும்...!!!!
ஆடை நாகரிகம் என்ற பெயரில் அறைகுறை ஆடைகள் அணியும் பெண்கள் அதை மாற்றி கொள்ள வேண்டும்..!!!!!
எதிர்கால இந்தியா செல்வ செழிப்புடனும் வறுமை இல்லா நாடாகவும் பசிக்காக உயிர்விடும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைய வேண்டும்..!!!!!
பிற நாடுகளிடம் எதற்கும் கையேந்தாமல் தன்னிடம் உள்ளதை வைத்து இந்தியா அனைத்து விதத்திலும் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும்...!!!!!
**ஜெய்ஹிந்த்**
தெ.கவிதாஞ்சலி
தருமபுரி
0 Comments