ராதா கிருஷ்ணரின் காதல் கதை

ம.சுதா கவி 
மதுரை மாவட்டம்

*ராதா கிருஷ்ணரின் காதல் கதை*

கோகுலத்தில் குழல் ஓசை 
கோபியரின் ஆடல் இசை 
கிருஷ்ணனின் பாலக  பருவம் 
ராதையோ தேவதை உருவம் !

கோகிலம் ஆண்ட கண்ணனை 
கோதையர் செய்தனர் வர்ணனை 
புல்லாங்குழல் இசை ஆள
ஆயிரம் கோபியர் அங்கு சூழ !

கோபியர் மயங்கிய வேளையிலே
அவனும் விழுந்தான் காதலிலே
குழலிசை நாடிய ராதை மனம் 
ராதாவை தேடிய அந்த பாதம் !

ராதையும் வாடிய அந்தி நேரம்
போதனை கூடிய காதல் அறம் 
முன் கோபியாம் ராதா முகம் சுழிக்க 
பின் கொஞ்சியே அவன் சிரிக்க !

ராதாகிருஷ்ணன் காதல் மனம்
வானும் நிலவாய் கடந்த தினம் 
துவாரகை நோக்கி அவன் பயணம்
ராதையை வாட்டிய அந்த தருணம் !

நீதி நிலைநாட்டிட சென்றிடடா 
நித்தமும் மனதிலே நின்றிடடா 
நீதிவலம் வர கோரினாள்
ராதா கிருஷ்ணனை மீட்டினாள் !

கிருஷ்ணனும் பிரியா நினைவை 
ராதா புன்னகை செய்த மனதை 
ராதையை பிரிந்திட்ட காதலை 
தாங்கிய அந்த  துவாரகை !

இருவரும் சேரா அந்நிலை 
மனதிலே சேர்ந்திட்ட புனித நிலை 
ராதாயின்றி அவன்  இல்லை 
கிருஷ்ணன் இன்றி ராதா இல்லை !

(குறிப்பு :அவன் - கிருஷ்ணன்)

0 Comments