பெயர் :
"பிரபஞ்சத்தின் காதலி"
( VS... நற்பவி )
தலைப்பு :
பெண் வலிமை
*******************
மூன்றாம் இடம்
எழுந்துநில்
உணர்ந்துகொள்...
விழித்துக்கொள்...
பெண்ணியம் மட்டுமல்ல
பெண் வர்க்க உணர்வும்
காக்கப்பட வேண்டிய ஒன்றுதான்...
தினம் தினம் விழிக்கிறாள்
பல கனவுகளோடு....
அவள் பயணம்தான் தொடருதே ஆயிரம் தடைகளோடு.....
பணியிடம்தான் சென்றாலும் பாலியல் தொல்லை...
தீப்பந்தம் எடுத்திட வேண்டும்..
இலவசமாய் வேசி பட்டம்..!!!
படித்து வாங்காத பட்டம்...!!!
தாயோ ? சேயோ ?
யாருக்கு அவள் யாரோ ?
உன்னை ஈன்றதும் பெண்ணே தானோ......?????
மனிதன் இங்கே!!!!!
மனிதம் எங்கே?????
தவறுகள் திருத்தப்படலாம்
ஆனால் அதன் விளைவுகள்???
குற்றத்தைக் கண்டு
வேடிக்கை பார்த்தால்
நாளைய விடியல் நாசிவடைந்துவிடும்
எதிர்த்தால் மட்டுமே இனி..!!!
இல்லையேல் அகண்ட பாரதம்
அழிவது உறுதி...!!!!
கதை அளப்பதை விட்டு
கள்ளிச் செடிகளை
களை எடுப்போம்!!!
மாற்றங்கள் வேண்டும் சட்டத்தில்
மதிக்க வேண்டும் நல்ல திட்டத்தை
மிதிக்கவேண்டும் காமுகர்களை
ஒழிக்கவேண்டும் காம எண்ணத்தை
ஒரு ஊரில் கற்பழிப்பு நடந்தால் அந்த ஊர் இளைஞர்கள் அத்தனை பேரும் வெட்கப்பட்டே ஆகவேண்டும்....
கடுமையான சட்டமும், மனமாற்றமும் இல்லாதவரை
இது தொடர்கதை தானோ...?
ஆணும் பெண்ணும்
நிகரெனக் கொள்வோம்
நாடும் நலம் பெற நாமும் உழைப்போம்.....
@Sowbarnika Pratibha
@Barathi Pratibha
0 Comments