இயற்கையின் காரிகை
ராதா கிருஷ்ணரின் காதல்
தோற்றம் இரண்டாக..
தோன்றல் ஒன்றாக...
சமர்ப்பணமான ஜீவாத்மா நாம்...
பிரிவின் துயரில் கலங்கிட்டவள்...
காரணம் அறிந்து மனம் தேற்றிய ராதை நான்...
எத்திசை கண்ணன் போயினும்
அவன் குழலோசை நானல்லவோ...
மாயனாய் நீ செய்யும் லீலைகளும்..
உபதேசித்த கீதைகளும்...
வெண்ணை உண்டிட்ட வாயின்
புன்னகையும்... நானாவேன்...
கோகுலத்தின் யாதவ அரசனே...
யமுனை நதிக்கரையின் மன்னனே...
என்னில் வாழும் கண்ணனே...
த்ரோகம் இழைக்க அறிந்திடா உன்னை..
காதல் ஏமாற்றம் செய்திட்டாய் என்றுரைத்தால்
அது நி்யாயமாகுமோ...
கதிரவன் உள்ளே மறைந்திருக்கும் வெண்ணிலவாய்...
சுவாசத்தில் மறைந்திருக்கும் உன் வாசமாய்...
என்றும் உன்னில் மறைந்திருக்கும் நம் காதல்...
அதனை இவ்வுலகம் அறிந்து வியக்கட்டும்...
0 Comments