பெயர்
அன்பு மட்டும் அருண்
தலைப்பு
மௌன மொழிகள்
உன்னை பார்த்த முதல் சந்திப்பு என்னை மறந்தேன் தன்னையே இழந்தேன்
நீ மௌனமாக வீசிய காந்த பார்வையால்
உன் மௌனத்தின்
பார்வை என்னை மெல்ல மெல்ல இழுக்கிறது
உன் கண்களுடன் காதல் பேசி செல்கிறது
உன் மௌனத்தின் மொழிகள்
என்னை வாட்டி வதைக்கிறது
நீ இன்றி தவிக்கிறது
உன் நினைவுகளும்
என்னை கொல்கிறது
உன்னிடம் நா சொல்லாத வார்த்தைகளே இல்லை
அனைத்தையும் கேட்டு கொண்டு
உன் மௌனத்தால்
என்னை கொஞ்சம் கொஞ்சமாக
கொன்று புதைக்கிறாயே
ஒரு முறை உன் திரு வாய் திறந்து பேசி விடு
உன் மௌனத்தின் மொழியை கொஞ்சம் ஓரம் தள்ளி விடு
ஒவ்வொரு நாளும்
உன் குரலை கேட்க
காத்திருக்கிறேன்
எனக்கு கிடைத்தது
என்னவோ உன் மௌனத்தின் மொழி மட்டுமே
வாய் வார்த்தைகளால் பேச முடியா சில வார்த்தைகள்
உன் மௌனத்தால் பேசி செல்கிறாய்
என் மனதையும்
புலம்ப வைக்கிறாய்
நின் திரு முகத்தை கண்ட நான்
அன்று முதல் இன்று வரை
உன் குரலைகேட்க முடியாமல் தவித்துக்கொண்டு இருக்கிறேன்
மழையோடு பேசுகிறாய்
அந்த மழையில் நனைந்து பாடுகிறாய்
என் முகம் பார்த்தாலே
மௌனத்தின் மொழியில் மறைந்து செல்கிறாய்
மழையில் நனைந்து
கொண்டு
துள்ளி விளையாடும்
பெண் மானே
அந்த மழையில் தானடி என் கண்ணீரும் கலந்திருக்கிறது
நீ இன்றி
எப்பொழுது உன் மௌனத்தை கலைப்பாய்
என் ஏக்கத்தை குறைப்பாய்
காத்திருக்கிறேன்
கண்மணியே
நின் குரல் கேட்க
@sapna
@kamupillai
0 Comments