பெயர் : யுவன் K.பாபு
தலைப்பு : மௌன மொழிகள்
தமிழ் மொழியில் பிறந்தது
கவி மொழி
மௌன மொழியால் அடங்கியது
விக்கலின் ஒலி
விக்
விக்
விக் இளவரசியின் விக்கல்
சத்தம்
"மீன் தொட்டியில் துள்ளிக்
குதிக்கும்
வண்ண வண்ண மீன்களின் சிணுங்கல் சத்தம்"
"விக்கல்
விக்கி விக்கி எம்மியதே
கண்ணின் முழி கரைப் புரண்டும் நதியாய் உருண்டதே
இளவரசனின் நெஞ்சில் உதிரிப் பூவாய்
விழுந்ததே "
"தொண்டைக் குழியில் சிக்கிய
மூச்சு காற்று குத்து சண்டையாய் முட்டி மோதியதே
நுரையீரல் வழியே உலவும் உமிழ் நீரும் தொண்டைக் குழியில் தேனாய் மாறத் துடித்ததே"
"அடம்பிடிக்கும் உதடுகளின் அசைவுகள்
"அலுங்காமல் "
"குலுங்காமல் "
உதடுகளாலே அசைப்போட வேண்டுமென்றதே
"அசைபோட்டு"
"அசைபோட்டு"
வறண்டிருக்கும் உதட்டுச் சாயத்துக்கு முத்த நீர் பாய்ச்ச வேண்டுமென்றதே "
"விக்கல் சத்தம் வான் வரைக்
கேட்டது
இளவரசனின் கண்களோ விக்கலை அடக்க வசிய வேட்டையும் செய்தது "
விழியால் விழிக்குள்
சென்றானே
கரு மேகக் கூட்டில் உசுப்பேத்தும் விழித் திரையின் உணர்ச்சிகளுக்கு காந்தப் பார்வை ஒன்று எய்தானே
கலையுலக விழியில் நடமாடும் நளினத்தின் நதியிலே
தீண்டல் பார்வையின் திரவிய அழகிலே நீராடவும் சென்றானே
திமிர் என்னும் சுடர் ஒளியை சுண்டி சுள்ளென்று எழுப்பினானே
மெருகேறும் பருவ ஜோதியாய் ஜொலிக்கவும் செய்தானே
பட்டுப் பூவாய் மிளிரும்
இமை இறகை மயிலாய்
தித்தித்தானே
விண் மீனின் திரையாய் படரும்
வழு வழுப்பு விழியையும்
ரசித்தானே
நாவல் பழமாய் உருளும்
கரு குண்டுக் கண்மணியை கனியாய் கவர்ந்தானே
ஈர உதடுகளின் இதழால் முத்தமிட்டு
உணர்ச்சி பூகம்பத்தை வெடிக்கவும் திட்டமிட்டானே "
"பெண் அங்கங்களில்
அழகு
உதடு
உதடுகளிளே மிகவும்
அழகு
என்னவளின்
உதடு"
பழச் சாறில்
பிசைந்தெடுத்த ஈரத் துளிகள்
"அவள் உதடு"
சிவந்த நிறமாய் வீங்கிக்
கிடக்கும் சூட்டு கொப்பளங்கள்
"தேவதையின் உதடு"
தாமரை இதழாய் மடியும்
வளைவு சுழிகள்
"மலர்களின் உதடு"
வழு வழுவென்று வழுக்கும்
பலாத் தோல்கள்
"கனியான உதடு"
உணர்ச்சித் தீயில் பற்களைக்
கடிக்கும் பட்டு இதழ்கள்
"தீயான உதடு"
பருவ கலையில் தாகம் தீர்க்கும்
"ரசனை ரசாயனத்தை" தடவிக் கொடுக்கும் நாக்கின் தழுவல்
"கலையான உதடு"
"விக்கலும்
எரிமலையாய் வெடித்தது
இளவரசனின் ரசனைத் தோட்டங்களோ அருவியாய் கொட்டிக் குவிந்தது"
"அடக்க முடியாத "ஆசை "
அல்லல் செய்ததே
அடங்க மறுக்கும் உணர்ச்சிகளை
அடக்கிடவும் துடியாய் துடித்ததே"
"இளவரசனின் மனம்
கட்டளையிட்டது
கவிதை வடிவில் இளவரசியின்
உதட்டை வர்ணிக்கவும் செய்தது "
"கவிதை
வசீகரம் எல்லை மிஞ்சியது
கவிதையாகியக் கவிதைக்கே
மூடு வரும் தருணமும் நேர்ந்தது
கவிதையே கவி வரிகளால் வெப்பம் கொண்டது
ஜோடிக்கும் கோர்வையால் தன்னையும் இழந்தது
கவியே தன் நிலை மறந்து
தன்னையே இழந்தது"
கவி கனாக்கே
இந்நிலையென்றால்?
"கவியைத் தீட்டும் கலைஞனுக்கும்
கவியில் நனையும் பெண்மைக்கும்"
என்ன நிலை?
நிலாவைப் பார்த்து வேடிக்கையா பார்க்கும் ?
"நிலாவிலே மெத்தை
விரித்து
மேகத்தை போர்வையாய்
போர்த்திடச் செய்து
ஊடலில் "நீந்தி நீந்தி" மூடு பனியால் மூழ்கத்தானே செய்யும்"
"அருகில்
சென்றான்
பின் நகர்ந்து சுவற்றில்
சாய்ந்தாள்
உதடோ "ம்" உச்சு கொட்டிட
ஒரு வித மயக்கமாய் தள்ளாடிட
உறையும் அளவு இடைவெளியில்
உதடும் உதடும் போர்த் தொடுக்க
தொண்டைக் குழியின் உள்ளே
"ம்" என்ற அடைக் காற்றும் அடைந்திட
தொண்டை நரம்பில் வியர்வைத் துளியும் தேனாய் கசிய
கண்களோ கன்னியின்
கண்களை கவிப் புரட்டிட
மூச்சு காற்றும்" தக தக"வென்றும் கொதிக்க
"ஹேய் பெண்ணே
ஹேய் பெண்ணே எனை ஏற்றுக் கொள்ளடி கண்ணே என்று
"மௌன"
போதையில்
காதலை சொன்னான்
காதலைச்
சொன்ன கணமே
இளவரசியின் உதட்டை கவ்வியும் பிடித்தான் "
"முத்தம் என்றானே
அமுதம் என்றாளே
இன்பம் என்றானே
வேண்டும் என்றாளே
தேன் என்றானே
சுவை என்றாளே
கவி என்றானே
வாசி என்றாளே
பழரசம் என்றானே
பருகு என்றாளே
"ம்" என்றானே
"ம் ம்" என்று சிலிர்த்தாளே
"ம்ம்"என்றானே
"ம் ம் ம்" என்று உடைந்தாளே
"ம் ம் ம்" என்று மூச்சு
விட்டானே
"ம் ம் ம் ம்" என்று பெரு மூச்சில் சண்டையிட்டாளே "
"அவன் மேல் உதடு
அவள் கீழ் உதட்டை கவ்வியது
அவள் கீழ் உதடு
அவன் மேல் உதட்டை உசுப்பியது
அவன் உதடும்
அவள் உதடும்
இரு உதடும் சமநிலை வந்தது
உச்சக் கட்டத்தின் உராய்வில் உச்சு கொட்டியது
சிவந்திருக்கும் உதடு
சிவிங்கமானது
உதடுக்குள் உறங்கும்
நாக்குகள் கத்தி சண்டையிட்டது
கத்தி கத்தி கூவும்
உதடுகள்
உயர் அழுத்த நிலையில்
ஊமையாய் உராய்ந்தும்
போனது
பஞ்சு உதடுகள்
எக்கி எக்கி தழுவியது
உதடுகளின் ஈரத்தால் உதடும்
வழுக்கி வழுக்கி விழுந்தது
புடைத்திருக்கும் சூட்டு
கொப்புளங்கள்
மெலிதாய் "பற்கள் பூவாள் "
குத்தியது
தித்திக்கும் மதுவாய் இருவரையும் மாய்த்தது"
"கண்கள் சொக்கிச் சொக்கி
செருகியது
நினைவுகளோ நித்திரையாய்
உறங்கியது
பருவமும் பட்டாசாய் "பட படவென" வெடித்தது
உள்ளமோ உளறல் சத்தம் இல்லாமல்
உணர்ச்சியில் பொங்கியது"
"தீராத விக்கல்
சத்தமும்
தீராத விளையாட்டுப் பிள்ளையாய் சிணுங்கியது"
"விக்கலுக்கும்
வயது வந்தப் பூக்களாய்
பூப்படைந்தது"
"சற்றென்று
இடியோ நிலத்தில் விழும் அளவில் இடித்தது
இரு பூக்களின் உணர்ச்சிகளும் வெட்டுப் பட்டது"
இளவரசியின்
கைகளோ
இளவரசனை தள்ளியும்
விட்டது
ஆரவாரமாய் ஆர்ப்பரித்த
இருவர் இதயத்தின்
மௌன மொழியின் யுத்தமும்
ஆழியில் தத்தளித்த
காதல் படகும்
தனிமையில் தவழ்ந்த சுவாரசியமும்
சுனாமியாய் சூழும் முன்னே
சுமுகமாய் இயல்பு நிலைக்கு மீண்டது
ஏக்கத் துளிகளோ வியர்வையாய்
பூத்து மௌன மொழியாய் புன்னகைத்தது... 🤍💙
@Sapna Sis @Kamu pillai Sis
0 Comments