தலைப்பு : மெளன மொழிகள்
பெயர் : சங்கவி சகி
முதல் நாள் பேசும் போது
இருவரின் வார்தைகள் தேய்ந்தது...
தேய் பிறையான வார்த்தைகள்
நிலவைப் போல ஒளிர்ந்தது...
ஒளியின் வெளிச்சத்தில் தொடங்கிய
கதைகளை தென்றல் தீண்டியது...
தீண்டிய தென்றலில் இருவிழிகள் இரண்டும் இமைக்காமல் பார்த்துக் கொண்டது...
பார்த்துக் கொண்ட விழிகள் வழியே
இதயம் உடல் மாறிப் போனது...
மாறிப் போன இதயங்களின் துடிப்பு
மகிழ்ச்சியில் விண்ணை தாண்டுகிறது...
விண்ணை தாண்டிய துடிப்பின் சத்தம்
ஒவ்வொன்றும் விண்மீன்களானது...
விண்மீன்கள் கணக்கை மிஞ்சவே நம்
காதல் நிகழ்வுகள் மெளனமாய்
விண்ணிற்க்கு இடமாருகிறது !!
@Sapna Sis @Kamu pillai Sis
0 Comments