ம.சுதா கவி
மதுரை மாவட்டம்
*மௌன மொழிகள்*
*(எந்தன் மனதில் கவியின் மௌன மொழிகள்)*
கருவறை இருளில்
நான் கண்ட அமைதி
கர்ப்பப்பை நிழலில்
நான் தொட்ட தாய்மை
பிரசவத்தின் சுகத்தில்
தாய் கண்ட நிம்மதி
பிள்ளை வரத்தில்
தாய் பெற்ற வெகுமதி
தாயும் சேயுமாய்
பேசிய மௌன மொழிகள் !
குழலின் துளையில்
இசையின் கோர்வை
நிலவின் ஒளியில்
கயலின் பார்வை
கடலின் அலையில்
காரிருள் போர்வை
பசுமையின் தோளில்
பரவசத்தின் மேன்மை
இயற்கையும் நானுமாய்
பேசிய மௌன மொழிகள் !
அன்பின் துகிலும்
ஆருயிர் நட்புறவும்
இன்பத்தின் பதுமையும்
ஈன்ற நல்லுள்ளமும்
தோழமை நெஞ்சமும்
தொடுத்த பாசமும்
தமிழின் நேசமும்
கவியின் பந்தமும்
உறவும் உணர்வுமாய்
பேசிய மௌன மொழிகள் !
அறிவின் ஊற்றாய்
ஒளியின் கீற்றாய்
அறிவியல் நுட்பமாய்
அதியத்தின் புதுமையாய்
அற்புதத்தின் புதிராய்
ஆதியின் அந்தமாய்
அந்தத்தின் ஆரம்பமாய்
அகிலத்தின் அதிபதியாய்
தேடலும் ஊடலுமாய்
பேசிய மௌன மொழிகள் !
எண்ணத்தின் வடிவாய்
எழுச்சியின் உருவாய்
முயற்சியின் துணிவாய்
முடிவிலா தொடர்வாய்
செயலின் வழியாய்
சிறப்பின் மொழியாய்
சீர்மை யின் ஆற்றலாய்
வாழ்வின் வேள்வியாய்
காலமும் கடமையுமாய்
பேசிய மௌன மொழிகள் !
தனிமையின் இசைவாய்
துன்பத்தின் ஊற்றாய்
இன்பத்தின் சிறுமையாய்
ஏமாற்றத்தின் வலியாய்
உறவுகளின் பலியாய்
தோல்வியின் வேதனையாய்
வேள்வியின் சாதனையாய்
வெற்றியின் இதமாய்
என் மனதும் மதியுமாய் பேசிய மௌன மொழிகள் !
@ Sapna
@ Kamu Pillai
0 Comments