பெயர்: பிரபஞ்சத்தின் காதலி...
VS.. நற்பவி..
தலைப்பு:
மெளன மொழிகள்
நாம் சந்திக்கும்
ஒவ்வொரு நொடியும்
நம் இதயங்கள் மௌன மொழியில் பேசி
உள்ளங்கள் மகிழ்கிறது
உணர்வுகள் துடிக்கிறது
உனது விழியும்
எனது விழியும்
ஏக்கத்துடன் பார்த்து
இளமையை தேடுகிறது
இதழ்களை நாடுகிறது
இரு மனதை வருடுகிறது.
நாம் சந்திக்கும் ஒவ்வொரு
நொடியும் நம் இரு இதயங்களில்
துடிப்புகள் போடுமே தாளமே.
மனம் தான்
பாடிடும் கீதமே நம்
வாழ்நாள் முழுவதுமே.
மொழி இல்லாத
வாழ்வில் பயணிக்கும்
நம் இதயத்தின்
புதுமனம் காணவே
பொங்கி வரும்
குருதி வெள்ளம்
நம் இதயங்கள் பரிமாற
விழிகளுக்கு விருந்தோம்ப
பேரின்பம் பொங்கிட இரு இதயங்கள் தடுமாறி போனதே...
அவள் பேசும் மொழியிலே
என் ஆழ்மனம் அவள் பெயர்
சொல்லியே அசைந்தாடுமே.
அவன் கண் ஜாடையில்
இவள் இதயம் துடிதுடிக்க...
அந்த காமனும் தோற்றானடி
அவன் கண்பேசும் வார்த்தையிலே.
வார்த்தைகளே இல்லாமல் இரு மனமும் துடித்துடிக்கும்
இருமனதின்
இதழ்கள் பேசிட
விடியும் வரை கவிப்பாடிட
இணைந்திடுமே
நம் இரு மனமே.
கரங்கள் தழுவிட
காத்திருக்கும்
உன் எண்ணம்
இதழ்களின் சொற்களால்
கனிந்திடுமே காதலுமே.
விழியென்னும் வாழ்வின்
பாடத்தை வழியாக
நம் வாழ்வில் பயணித்ததால்
இனி வரும் வாழ்வும்
வசந்தம் ஆனதடி.
இரு மனங்கள் பேசும்
மெளனயுத்தம் நாளும்.
இரு இதழ்கள் தவித்திடும்
ஒரு புதிய யுத்தம்.
இரு இதயங்களுக்கு புரிந்திடுமே
மெளன மொழியும் தாய்மொழியாக
ஆனதே.
மௌனத்தால்
பல கதைகள் பேசி
என்னை ஒவ்வொரு
நாளும் வெல்கிறாயே
வென்றது யாருமில்லை
உனது விழிகள் தானடி
என் விழி பேசும்
வார்த்தைகள் புரியாமல்
உன் விழிகள்
தவிக்கும் தவிப்பை
உணருகிறேன் நானடா.
என் கண்ணா என் காதலா
நீ அறிவாயா.
காமத்தின் உச்சத்தை
கண்ணிலே காட்டாதே.
கண்மணியே நீ அறிவாயா
நம் காதலில் இங்கே
ஏதேடி கண்ணே காமம்.
இரு உள்ளங்கள் இணையும் நேரம்
நம் இதயங்கள் புரியும்
அந்த இரவின் ஓசை.
கண்கள் பேசி
இதயங்கள் கலந்து
மெளனமொழி கலைந்து
நம்கைகள் இணைந்து
வாழ்திடலாம் வாழ்விலே
வசந்தங்கள் அழைக்கிறது
வண்ணங்களாய் வானில்
நட்சத்திரமாய் வாழுமே
நம் காதலின் தீபமே.....
I (🤍💙) U
@sow karthi
@Sapna Sis
0 Comments