பெயர் : சு. லோகேஸ்வரி
தலைப்பு : மௌன மொழிகள்
ஆற்றங்கரையில் அமர்ந்த சிறுமி ஒருவளை அதனுள் விழுந்த முதிர்ந்த இலையொன்று தன்னுடன் பேச அழைக்கிறது மௌனமொழியில்
கேட்பொறி கொண்டு கேட்கும் இன்னிசை கடந்த கால நினைவுகளை மௌன கீதங்களாய் ஒலிக்கிறது.
கறையுள்ள வெண்மதி என்னிடம் மட்டும் கூறியது துயில் கொள் என மௌன மொழியில்.
என்னைத் தீண்டிய புழுதியுடன் புறப்பட்ட புயற்காற்று ஒன்று, தென்றலை ரசி என்றது மௌன மொழியில்.
மலைகளில் தவழும் மேகங்கள் ,என்னைப் புல்தரையில் உடுத்தி நேசி என்றது மௌன மொழியில்.
குளிர்காலத்தில் வெயில் கண்ட பறவைபோல மகிழ்வுறுகிறேன் உன் மௌன மொழியில்...
உரையாடல்களின்றி தத்தளிக்கும் என் மௌன மொழிக்கு உயிர் கொடுத்தது உம் மௌனங்கள் தானோ???.
Insta I'd : lovelog6
@Sapna Sis @Kamu pillai Sis
0 Comments