தலைப்பு :
மௌன மொழிகள் !
எத்தனை முறை
கடந்திருக்கிறேன் என்னவளை !!!!!
கல்லூரி வாசலிலும்..//
காத்திருந்த பேருந்து நிழற்கூடத்திலும்...//
மௌனமே பதிலாக !!!
சண்டைகளின் சமாதானத்திலும்..//
கோபங்களின் உச்சத்திலும்...//
மௌனமே பதிலாக..!!
அவள் விரல் தொட்ட முதல் நிமிடமும்..//
அவள் உதடு பட்ட முதல் முத்தத்திலும்...//
மௌனமே பதிலாக..!!
எனக்கான முதல் அழுகையையும்...//
என் தோள் சாய்ந்த முதல் தேடலிலும்..//
மௌனமே பதிலாக...!!
அவளின் முதல் சந்திப்பிலும் சரி...//
என்னை முழுதாய் இரசித்ததிலும் சரி..//
மௌனமே பதிலாக...!!
அன்றோரு நாள்.....
என் கை தழுவிய
கடைசி நொடி.....//
என் முகம்பார்த்த
கடைசி பொழுது...//
என் கரம்பிடித்து சிந்திய
கடைசி கண்ணீர் துளிகள்...//
அனைத்திலும்
மௌனமே பதிலாக !!!
இத்தனை உணர்வுகளிலும்
அவள் மொழிகளை சேர்த்து கவிதையாக கோர்த்திருந்தாலும் இவ்வளவு அழகா என்பது கேள்விகுறியே...
அவ்வளவு அழகாய் செதுக்கினாள்..//
அவள் !!!
மௌன மொழியாக!!!!!
நன்றி
தேடல் மணி
நாமக்கல் மாவட்டம்
@Sapna Sis @Kamu pillai Sis @🔥பாரதி பாஸ்கி✍
0 Comments