மௌன மொழிகள் செப்5-7

தலைப்பு: மௌன மொழிகள்.

பெயர்: கவிதையின் காதலன் பாண்டி

பூக்கள் வாசம் கலந்த புன்னகை மொழியில் பேசிடவே அதை பூமகள் அறிந்திடவே கூந்ததலில் சூடிக்கொண்டால்... 

அந்த பூக்கள்  ஈரக்கூந்தல் கலந்திட்ட பனித்துளி பேசிடவே அதை மன்னவன் மட்டும் அறிந்திடவே  மனதை கொடுத்துவிட்டான்... 

அவள் மனைவி என்பதனால் அதன் வாசம்  சுவாசம் மன்னனை  இழுத்திடவே கட்டி அணைத்தபடி இதழ்கள் பேசியதே முத்த மொழியில்... 

முத்தங்கள்  மேனியில் கடந்து வலம் வந்திடவே பெண்மையும் பேசியதோ  நாணம் கலந்த அழகிய மொழி... 

அழகிய மொழியில் அழகாகிறாள் கைவிரல் உரசிக்கொண்டதோ ஊமை மொழி... 

ஊமை மொழியில் கட்டி தழுவியதோ காதல் கலந்த காம மொழி... 

காம மொழியின் அதிகபடியான வார்த்தையில் தானோ மூச்சடைத்த சினுங்கள் மொழி... 

சினுங்கள் மொழியில் நிலவே மேகத்தின் இடையே தேய்ந்து கொண்டதோ தேடல் மொழி... 

தேடல் மொழியில் தேடிக்கிடைத்ததோ தேவதை அவளின் தேனிலவின் கனவு மொழி... 

கனவு மொழியில் எண்ணம் முழுவதும் வண்ணம் நிறைந்த வாழ்க்கை முழுவதும் அடைந்த உச்சத்தில் தானோ  இன்ப மொழி... 

இன்ப மொழியில் அவள் முழுவதுமாக கலைந்து விட்டால் கலைத்ததோ கணவனின் கைவிரல்கள் செய்திட்ட விந்தை மொழி... 

விந்தை மொழியில் பேச பேசவே கருவிழிகள் கரைந்து போனதோ மயக்க மொழி... 

மயக்க மொழியில் மறுநாள் வந்திடவே தேநீர் தந்தவள் பேசி சென்றதோ கண்ணின் விழிகள் மொழி... 

விழி மொழியில் விழுந்து விட்டதோடு கலைந்து விட்டதோ முதல் இரவின் மொழி... 

முதல் இரவின் மொழியில் முழு இரவும் பேசியபடி தேநீர் வந்து தேகம் நிறைந்து இரு விழிகள் பார்த்து இதயம் பேசியதோ துடிப்பு மொழி ... 

துடிப்பு மொழியில் உனக்காக நான் உனக்குள்ளே நான் எனக்காக நீ எனக்குள்ளே நீ என்று வாழ்க்கை தொடர்ந்ததோ நம்பிக்கை மொழி... 

நம்பிக்கையின் மொழியில் வாழ்க்கை கடந்ததோ குடும்பத்தின் அன்பு மொழி... 

அவன் அன்பு மொழியின் உதிரத்திற்கு அவள் உருவம் கொடுத்தால்  வந்ததோ அழகிய மழலை மொழி... 

நாம் அதிகம் பேசிடும் மௌனமொழியோ அதிக சந்தோஷம் இருந்திடும் போதும் .. . 

கண்ணீர் மொழியோ அதிக வலிகள் இருந்திடும் போதும் மட்டுமே பேசப்படுகிறது... 

இது இல்வாழ்க்கையிலும் 
பலரின் உள் வாழ்க்கையிலுமே பேசப்படுகிறது....


@⁨sow karthi⁩ 
@⁨Kamu pillai Sis⁩

0 Comments