இயற்கையின் காரிகை
மௌன மொழிகள்.
மௌனம்...
மனிதனின் விருப்ப மொழியோ...
வெட்கத்தில்
காயத்தில்
சந்தோஷத்தில்
காதலில்
எதிர்பாரா சந்திப்பில் என
எங்கும் வீற்றிருக்கிறதே
இந்த அழகிய மொழி..
வார்த்தைக்கு மதிப்பு இல்லா இடங்களில்
மௌனமே சிறப்பும் மதிப்பிற்குரியதுமாம்...
இதயம் பல வார்த்தைகளை உரைக்க
சத்தமிடும்போதும்...
உதடுகள் மட்டும் மௌனம் கொள்ளுமாம்
வலிகளை மறைத்திட...
பிரச்சனைகள் பல இருந்தும் தீர்வு
காண சிறந்த மொழியாம்
இந்த மௌனம்....
பல சமயங்களில் மௌனம்
பல உறவுகளையும் பல இதயங்களையும்
உடைக்காமல் காக்கிறதாம்...
உலகில் பேசும் மொழிகள் பல...
பேசாத மொழிகளின் துரிதம்
கண்களின் மௌனமாம்
கண்ணீர் மட்டுமே...
மனம் கேட்கும் கேள்விக்கு
வார்த்தைகள் பதில் சொல்லாமல் மௌனம் காக்க...
கண்களில் வலியும் நீர்...
மௌனமாய் பல விடைகள் சொல்லிடுமே..
காதலில் மௌன மொழி அழகு...
நட்பில் மௌன மொழி உருக்கிடும் மெழுகு..
பூவின் மௌன மொழி
காற்றுக்கு புரிந்திடுமாம்...
இருளின் மௌன மொழி
நிலவும் உடைத்திடுமாம்..
ரணத்தில் பூட்டிய
சில மனங்களின்
மௌன மொழி
அன்பானவர்களுக்கு உரைத்திடுமாம்..
விதையின் மௌன மொழி
பூமி அறிந்திடுமாம்..
பூமியின் மௌன மொழி
வானும் பொழிந்திடுமாம்...
இங்கு மௌன மொழி
அறியாதாரும் இல்லை...
அதை உணராதாரும் இல்லை..
மொழிகளை மறந்து
மௌன வீணை மீட்டுபவர்களுக்கு
கடல் அலையின் மௌனமும் காதல் பேசுமாம்...
தனிமையும் கொஞ்சம் இனிமை
காணுமாம்...
@Sapna Sis
@Kamu pillai Sis
0 Comments