மௌன மொழிகள் செப்5-7

தலைப்பு: மௌன மொழிகள்.

பெயர்: யாதுமானவள் மீரா.

பெண்ணவள் மொழிகள் பல கற்றறிந்தும் அவள் தேர்ந்தெடுக்கும் மொழி ஒன்றே!

மழலை பருவத்தில் வெற்றியோ தோல்வியோ வெளிப்படுத்திட உதவிய மொழி ஒன்றே!

மங்கை பருவத்தில் தோழிகளிடையே ரகசிய பரிமாற்றத்திற்கு பயின்ற மொழி ஒன்றே!

காதல் கணவனின் அழைப்புகளில் கூடலில் கையாண்ட மொழி ஒன்றே!

தருணங்கள் வேறாயினும் இயற்கையின் அற்புதங்களிடம் இவள் கொஞ்சிடும் மொழி ஒன்றே!

வது அவள் வற்றாத நீரூற்றாய் மொழிந்திட மோகம் கொண்டவளே!

ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் தன் எண்ணங்களை உறைத்திட ஏக்கம் கொண்டவளே!

வாய்மொழி அறிந்தும் ஓர் ஊமையாய் வலம் வருகிறாள்!

நித்தம் பல கனவுகள் கைகோர்த்தாலும் அவை எல்லாம் அமைதியே மொழிபவள்!

பெண்மைக்கு மென்மை சேர்த்திடும் மௌனமும் அழகே!

பெண்ணவள் மௌனத்திற்கு எண்ணிலடங்கா அர்த்தமுண்டு அவையாவும் அறிந்தவன் அவளுடையான் அன்றி யாரோ?

ஏனோ அவளின்
அத்தனை உணர்வுகளையும் 

மௌனமே ஆயுதமாய் மௌனிக்கிறாள்!

Yathumaanaval_meera.

@⁨sow karthi⁩ 
@⁨Kamu pillai Sis⁩

0 Comments