அன்பிற்குரிய ஆசிரியர்களுக்கு செப்2 to4


 



ஐந்து வயதில் அன்னையின் மடி இறங்கி 
ஆசிரியர்களின் கைகளால்  கல்வியை அள்ளி எடுத்து தர 
பள்ளி சென்ற நாள் முதல் 
இன்றெனும் வரையிலும் 
நான் வாழும் வாழ்க்கை அவர்கள் கற்பித்த  ஒழுக்கமல்லோ!

தாய் மொழி கொண்டு தாயிடம் பெற்றதை விட தாயையும் மேன்மை அடைய செய்கிறது ஆசானிடம் கற்றவைகள்!

அம்மா என அழைக்க செய்தவள் தாய் 
அதன் அர்த்தம் தந்தவர்கள் ஆசிரியர்கள் அல்லோ!

இவர்கள் இல்லறம் கடந்து துறவு கொள்ளாத அறம் நடத்தும் ஆசிரிய கொடைகளே! 

இவ்வுலகிலே சிறந்த செயலும் புண்ணிய தொழிலும் தான் கற்றதை கற்பித்தலே!

மாதா பிதா குரு தெய்வ வரிசையிலே 
கடவுளுக்கு முன்னான நம் கண்கள் கண்ட உண்மை உருவமே 
ஆசிரிய இறை மக்கள் தான்!

கல்வியின் அவசியம் உணர்த்துபவர் தந்தை 
கல்வியை வாழ்வோடு இணைத்தவர்கள் ஆசிரியர்கள்!

இனி உலகம் வியக்கும் விந்தைகளையும் 
முன் உலகம் கண்ட அதிசயங்களையும் 
தாய் மொழியையும் பிற மொழியையும் 
விஞ்ஞானமும் தத்துவமும் 
வரலாறும் வாழ்கைதேர்ச்சியும் 
கணக்காய்வும் கணினி துறையையும் 
உள்ளங்கைகளில் ஊற்றெடுக்க செய்தவர்கள்!

எந்த எதிர்பார்ப்பும் இன்றி தன் வெற்றி என அவர்கள் நினைப்பது 
சிறந்த நம் எதிர்காலத்தை தான்!

நம்மை பெற்றவர் கடனும் கல்வியை கற்பித்தவர் கடனும் ஒரு போதும் தீர போவதில்லை!

ஆசிரியர் அல்லாமல் போனால் 
உலகில் நாமில்லை உலகமும் இன்றில்லை!

நட்பு தோய வாழ்த்துகிறேன் 
நலம் வாழ...!
அன்பிற்குரிய ஆசிரியர்களே!


Insta id :- krish_ashiq

@⁨Sapna Sis⁩ 
@⁨Tamil Sis⁩

0 Comments