பெயர்:- அல்லல்களின் அரிவை அம்மு
இரண்டாம் இடம்
தலைப்பு:- பொதிந்த பொக்கிஷங்கள்
செவி உணரும் என் தாயின் தாலாட்டு...
அடைத்து வைத்த குட்டி விண்மீன்கள்..
மறந்திட இயலா முதல் காதல்...
அன்பை மட்டுமே எதிர்பாக்கும் உறவுகள்...
அனைவருக்குமான கல்வி...
ஊழல் இல்லாத அரசியல்...
பணப்பட்டுவாடா இல்லாத ஓட்டு...
அச்சம் இல்லாத பயணம்...
தனிமையான இரவு ரயில் பயணம்...
தொட்டு ரசிக்கும் நிலவு...
கட்டி அணைக்கும் காற்று...
எண்ணிக்கையில் அடங்கும் விண்மீன்கள்...
அலைகள் இல்லாத கடல்...
பேசி சிரிக்கும் ரோஜா மொட்டு...
வேகமாக சுழலும் கடிகாரமுள்...
பட்டினி கிடங்காத வயிறு...
பஞ்சம் இல்லா பொருளாதாரம்...
அரசு விவசாயம்...
குப்பைகள் இல்லா கிராமங்கள்...
மரங்கள் நிறைந்த நகரங்கள்...
பாழடைந்த முதியோர் இல்லம்...
சரிசமான கட்டிடங்கள்...
ஆசைகளை நிறைவேற்றும் கனவுகள்...
ஆசையை நிறைவேற்றும் கணவன்...
நினைவுகள் இல்லா உறக்கம்...
ஆசை காதலனோடு ஆடம்பரமில்லா வாழ்க்கை...
நீண்டு கொண்டே போகுதே என் நிறைவேறா ஆசைகளே...
@Sowbarnika Pratibha @Kamu pillai Sis
0 Comments