நிறைவேறா ஆசைகள்

பெயர் : யுவன் K.பாபு 

மூன்றாம் இடம்

நிறைவேறா ஆசைகள் 
......................................

கார்முகிலின் கருமையின்  மென்மையில்  காதலிக்கு கவி வர்ணம்  தீட்டும் தாகம் 

வெண்ணிலவு  வெளிச்சத்தில் 
மூவாயிரம் முத்தமிட்டு முத்தக்கடலில் நீந்தி  முத்தெடுக்கும் பரவசம் 

மொட்டை மாடி வெண் திரையில் 
விரல் கோர்த்து வர்ணிக்கும் வர்ணஜாலக்  கனவுலகம் 

கட்டிப் பிடித்து காதல் கனாவில்  
நனைந்து ஜலதோஷம் பிடிக்கும் காதல் சுரம்  

"வருடும் வானவில்லை  பூங்கொத்தாய் கோர்த்திட்டு 

பூக்களில் படரும் பனியை 
சிலிர்க்கவிட்டு 

மண்டியிட்டு இதயக்கதவை 
திறக்கவிட்டு 

படர்ந்திருக்கும் பட்டாம் பூச்சியை 
பறக்கவிட்டு  

மனதளவில் உயிராய் உன்னை
காதலிக்கிறேன் 

நீ சம்மதமென்றால் இக்கணமே
மணமுடிக்கிறேன் 

அன்பென்னும் அடைமழையின்  அணைக்கட்டை
உடைத்தெறிகிறேன்  

சுனாமியாய் பொங்கி  உன்னில் 
வாழ விரும்புகிறேன்"

காதலிப்பாயா? 

இல்லை? 

காதலை வெறுப்பாயா ? 

நீ "ஹ்ம்மென்றால்"காதல் இளவரசனாகிறேன் 

நீ "இல்லையென்றால்" 
உன்னை காதலிப்பது எப்படியென்றுக்  கற்றுக் கொள்கிறேன்

முதல் காதல் ஆசையும் 
நீயே 

நிறைவேறா  கனவின் ஆசையும் 
நீயே 

என்னிலிருந்தும் 
எனதருகில் இல்லாக் 
காவியக் கலையே 

உனக்காகவே  காத்திருக்கிறேன் 
உன்னில் சரணடையவே💙🤍 

- யுவன் K. பாபு


@⁨Kamu pillai Sis⁩ @⁨Barathi Pratibha⁩ @⁨Sowbarnika Pratibha⁩

0 Comments