பெண்ணியம்

பெயர் :அறிவு 
செவ்வூரான்

இரண்டாம் இடம்
 
 தலைப்பு : பெண்ணியம்
Insta id : arivu arivu

நல்லவர்கள் வாழும் உலகமே 
நியாயம் பேசும் மனிதர்களே
நீதி ஒன்று சொல்லுங்கள் அடிமை கடலில் 
நீந்தி தத்தளிக்கும் பெண்களுக்கு

பொம்பளைங்க பொறப்பு புருசனுக்காக 
புரோகிதம் சொல்லுதே 
பொது கணக்கா 
ஆம்பளைங்க மட்டும் பொதுப்பணிக்கா 
அர்ச்சனை செய்ய விலக்கிருக்கா

எத்தனை சட்டங்கள் இங்கிருக்கு
எத்தனை தண்டனைகள் கொடுத்திருக்கு
கூடுதல் சட்டம் போட்டாலும் 
குழந்தை பாலியல் குறையவில்லையே

பெண்ணியம் பேசும்  தாயுள்ளமே 
போட்டிக்கு வாழ நினைத்து
போதைக்குள் நுழைவது சரியாகுமா.?

மறைத்த போதிலும் மார்பு சதையை கசக்க நினைக்கும் மானமுள்ள மானிடரே 
மார்பில் சதை கூடுவதற்கு
பாவம் அவள் என்ன செய்வாள்..?

அறிவு செவ்வூரான்.
@⁨Sowbarnika Pratibha⁩ 
@⁨Kamu pillai Sis⁩

0 Comments