பெயர்: யுவன் k.பாபு
தலைப்பு: அன்புக்குரிய ஆசிரியர்களுக்கு (ஆசிரியை நறுமுகை )
ஆறடிக் கூந்தல் அழகியே
அறிவியல் ஆசிரியையே
அறிவென்னும் பெட்டகத் தகவலை காவியமாய் கரும்பலகையில் வர்ணம் தீட்டும் வேளையிலே
முன் இருக்கையில் இருக்கும் என்னவளின் ரோஜா மலரின் கொண்டையிலே
வெள்ளை நிற சாக்பீஸ் துண்டுகளை ஏவுகணையாய் ஏவினேன் வகுப்பறையிலே
இசகு பிசகாய் சாக் பீஸ் துண்டும் தோட்டாக்களாய் பட்டுத் தெறித்தது
ஆசிரியையின் முதுகென்னும்
கலைக் கூடத்திலே
ஆசிரியையின் விழியோ கொதிகலன் நெருப்புத் துகளாய் கொதியாய் கொதித்ததே
வார்த்தைகளோ என் மீது சரவெடியாய் பாய்ந்து இதயத்தை தாறு மாறாய் சுட்டெரித்ததே
காதல் கடிதமும்
வேதியியல் வகுப்பில் வசமாய்
சிக்கியதே
பிரம்புகளின் அச்சுகளோ
என் கையில் நினனவுச் சின்னமாய் பதிந்ததே
என் காதல் பயணத் தொடர்வண்டியின் சங்கிலிக் கொத்துக்களோ பாதியில் அறுந்து அநாதையாய் நின்றதே
முப்பது வருடம் கழித்து நலிந்த நோட்டுகளைப் புரட்டிப் பார்த்தேனே
நாசாவில் விஞ்ஞானியாய் அவதரித்துள்ளேனே
நறுமுகை ஆசிரியை அன்று கண்டிக்காமல் விட்டு இருந்தால் நாசமாய் போயிருப்பேனே
ஆசிரியை அன்றுத் திட்டிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் ரணமாய் இருந்தது
இன்று நினைத்து பார்க்கும் போது ஒவ்வொன்றும் சுமையான சுகமாய் இனிக்கிறது
அன்புள்ள ஆசிரியைக்கு இச்செய்தியை
இக்கணத்தில் சொல்லவும் விரும்புகிறேன்
உங்களை ஆசிரியையென்று அழைப்பதை விட நறுமுகையென்று தான் மனதில் அழைப்பேன்
நீங்கள் மிகவும் அழகானவளென்று நண்பரிடம் அவ்வப்போது சொல்லுவேன்
என் மனதில் இருக்கும் அன்பை காதலாய் இவ்வுலகிற்கு இப்பொழுது கவி மொழிகிறேன்
Love u teacher 💙💐
@Sapna Sis @Kamu pillai Sis
0 Comments