ம.சுதா கவி 
மதுரை மாவட்டம்

மூன்றாம் இடம்

*அன்பிற்குரிய ஆசிரியர்களுக்கு*

(மாண்புமிகு மாணவியின் கவிமடல்)

அன்னையின் உணர்வே ஆசான் உறவே 
ஆணையின்‌ பிறப்பிடமே 
தலைவணங்கி நின்றேன் !

உன் தனித் திறன் கொடுத்தாய்
தந்தையின் பண்பை தானே வளர்த்தாய் 
தரணி எங்கும் என்னை சாதிக்க வைத்தாய் !

மொழியை இனிதே கற்றுத் தொடுத்தே காற்றில் இசையாக செய்தாய் கவலைக் கடலை கரையேர தோழமை தந்தாய் !

ஆசை நிழலை நிசமாக ஊக்கம் அளித்தாய் 
ஒழுக்கமும் நேர்மையும் ஒருங்கே எனக்களித்து 
என் எண்ணம் ஓங்க செய்தாய் !

அன்பாய் ; பண்பாய் !ஆதியாய் ; அந்தமாய் !
கல்வியாய் ; கற்றலாய் !
அறிவியலாய் ; ஆற்றலாய் !

என்றென்றும் உன்னை வணங்குகிறேன்
உன் ஆசியை நான் தொழுதே வாழ்கிறேன் !
அன்பிற்குரிய ஆசிரியர்களுக்கு 
மாண்புமிகு மாணவியின் கவிமடல் சமர்ப்பணம் !

@sapna
@kamu Pillai